பணிமேடை சேமிப்பது உங்கள் முழு பணிமேடை சூழலையும் எளிதாகக் காப்புப் பிரதி எடுக்கவும், மீட்டெடுக்கவும் மற்றும் ஒத்திசைக்கவும் உதவுகிறது. இது உங்கள் கருப்பொருள்கள், சின்னங்கள், எழுத்துருக்கள், சுவரொட்டிகள், நீட்டிப்புகள், பணிமேடை கோப்புறை, தட்டைகட்டு செயலிகள் மற்றும் அவற்றின் தரவு மற்றும் பிற பணிமேடை அமைப்புகள் - அனைத்தையும் ஒரே காப்பகத்தில் சேமித்து இறக்குமதி செய்கிறது. எதைச் சேர்க்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்து, தானியங்கு காலச் சேமிப்புகள் மற்றும் ஒத்திசைவு மூலம் சாதனங்கள் முழுவதும் உங்கள் அமைப்பைச் சீராக வைத்திருக்கவும்.