கிளாசிக் கம்ப்யூட்டர்கள் மற்றும் கேம் கன்சோல்களின் கண்கவர் உலகத்தைக் கண்டறியவும்! 6502 அசெம்பிளி மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் - NES, Commodore 64 மற்றும் அரத்திப்பழம், குமளிப்பழம் II போன்ற சின்னச் சின்ன அமைப்புகளை இயக்கும் அதே குறியீடு.
முன் நிரலாக்க பட்டறிவு தேவையில்லை. ஊடாடும் பாடங்களுடன் தொடங்கி, படிப்படியாக உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
பொழுதுபோக்காளர்கள், மாணவர்கள் மற்றும் கணினிகள் உண்மையில் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதைப் பற்றி ஆர்வமுள்ள எவருக்கும் ஏற்றது!
Learn 6502 இப்போது Windows மற்றும் macOS இலும் இயங்குகிறது. Linux பயன்படுத்தாத ஒரு நண்பருக்கு இதை அறிமுகப்படுத்த நினைத்திருந்தால், இப்போது அதைச் செய்யலாம்.
Linux-க்கு இப்போது ஒரு AppImage-ம் உள்ளது: ஒரே கோப்பு, நிறுவல் தேவையில்லை, நாங்கள் தொகுப்பு வழங்காத விநியோகங்களிலும் இது பயன்படும்.
இரண்டு புதிய எடுத்துக்காட்டு நிரல்கள், இரண்டுமே உங்களிடமிருந்து வந்தவை: Jacob எழுதிய Dino Run, edit12 எழுதிய Line Buster 6502. பகிர் பொத்தான் மூலம் அனுப்பப்பட்ட முதல் எடுத்துக்காட்டுகள் இவை; இன்னும் பல வர வேண்டும் என்று விரும்புகிறோம்.
வணக்கம்! தமிழ்நேரம் அவர்கள் பங்களித்த தமிழ் மொழிபெயர்ப்புகளை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நன்றி!
உங்கள் கணினியின் மொழி சீனமாக இருந்தால், பயன்பாடு மீண்டும் சீனத்தில் காட்டப்படும். இதுவரை அது தவறுதலாக ஆங்கிலத்திற்கு மாறி வந்தது.
எப்போதும் போல, இந்த வெளியீட்டில் பல சிறிய திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள் உள்ளன.